23 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்
23 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்
23 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்
ADDED : ஜூன் 11, 2024 06:07 AM
கோபி : வைகாசி மாத சுப முகூர்த்த தினமான நேற்று, கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவிலில், நேற்று அதிகாலை, 4:30 மணி முதல், 7:00 மணி வரை, ௨௨ ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.
இதனால் பாரியூர் சாலை, ஈரோடு, சத்தி, மொடச்சூர் சாலைகளில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் அதிகரித்தது. கோபி சிக்னலின் மூன்று திசையிலும், வாகனங்கள் அணிவகுத்து ஸ்தம்பித்து நின்றது. போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தினர்.