/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி
டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி
டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி
டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி
ADDED : ஜூன் 10, 2024 01:33 AM
கோபி: கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி விக்னேஷ், 29; நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த, பிரபு, 34, சென்னியப்பன், 31, ஆகியோருடன், அப்பாச்சி பைக்கில் மூலவாய்க்கால் என்ற இடத்தில், நேற்று அதிகாலை சென்றார்.
பிரபு பைக்கை ஓட்ட, மற்ற இருவரும் அமர்ந்திருந்தனர். கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முகமது அஜ்மல், 35, ஓட்டி வந்த, மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ், அப்பாச்சி பைக் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த காமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் இறந்தார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.