/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் புதர் மழை காலத்தால் துார்வார கோரிக்கை பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் புதர் மழை காலத்தால் துார்வார கோரிக்கை
பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் புதர் மழை காலத்தால் துார்வார கோரிக்கை
பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் புதர் மழை காலத்தால் துார்வார கோரிக்கை
பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் புதர் மழை காலத்தால் துார்வார கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2024 01:31 AM
ஈரோடு: மழைக்காலங்களில், ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஒட்டிய பகுதிகளான, அன்னை சத்யா நகர், பூம்புகார் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சூளை பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் புகுவதும், குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சில நாட்களில் மழை காலம் தொடங்குவதால், பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை துார்வார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: அன்னை சத்யா நகர், பூம்புகார் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சூளை ஆகிய பகுதிகள் வழியாக ஓடும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில், கோரை புற்கள், புதர் வளர்ந்து காணப்படுகிறது. ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவு தேங்கியுள்ளது. ஒரு சில நாட்களில், பருவமழை துவங்க உள்ள நிலையில், மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தால், புதர்கள் காரணமாக கரையோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை தொடங்கும் முன், பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் உள்ள புதர்களை அகற்றி, ஓடையை துார்வார வேண்டும். இவ்வாறு கூறினர்.