/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓட்டு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு துவக்கம் ஓட்டு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு துவக்கம்
ஓட்டு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு துவக்கம்
ஓட்டு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு துவக்கம்
ஓட்டு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு துவக்கம்
ADDED : ஜூன் 04, 2024 04:48 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுக்கள், இன்று காலை, 8:00 மணிக்கு எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஒவ்வொரு மேஜையிலும், ஒரு வெப் கேமரா கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கான தேர்தலில் தி.மு.க., - கே.இ.பிரகாஷ், அ.தி.மு.க., - ஆற்றல் அசோக்குமார், த.மா.கா., - விஜயகுமார் என, 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 6 சட்டசபை தொகுதிகளில், 1,688 ஓட்டுச்சாவடிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் 'சீல்' வைக்கப்பட்ட அறைகளில் சட்டசபை தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கல்லுாரி வளாகத்தில், 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை, 5:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், 'சீல்' வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு பெட்டிகள், ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்கின்றனர்.
காலை, 7:00 மணிக்கு மேல் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளின் 'சீல்' அகற்றப்படும். முன்னதாக, 8:00 மணிக்கு, 9 மேஜைகளில், 2 சுற்றாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கும். அடுத்து சரியாக, 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கும்.
தொகுதி வாரியாக, 6 சட்டசபை தொகுதிக்கும் தலா, 14 மேஜைகள் என, 84 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணும் பணியில் தலா, 84 கண்காணிப்பாளர்கள், 84 உதவியாளர்கள், 84 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுவர். கூடுதலாக, 20 சதவீத கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் என, 54 பேர் ரிசர்வில் வைக்கப்பட்டிருப்பார்கள்.
அதுபோல தபால் ஓட்டு எண்ணும் மையத்தில், தபால்
ஓட்டுக்களை பிரித்தல் பணிக்கு ஒரு மேஜையும், எண்ணும் பணிக்கு, 8 மேஜை என அமைத்துள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் அலுவலர், ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர், ஓட்டு எண்ணும் உதவியாளர் இருவர், நுண் பார்வையாளர் ஒருவர் பணி செய்வார்கள். தபால் ஓட்டுக்களை பிரித்தல் மற்றம் எண்ணும் பணிக்கு மட்டும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை சட்டசபை தொகுதி வாரியாக, 17 முதல், 22 சுற்றுக்கள் வரை எண்ணப்படுகிறது. தபால் ஓட்டுகள் 2 சுற்றில் நிறைவடையும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஒவ்வொரு மேஜையிலும் 'வெப்' கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அறைகளில் தேவையான இடங்களில் வீடியோ கேமரா பதிவு, தொடர்ந்து நடக்கும்.
அதுபோல, அதிகாரிகள் உட்பட பணியாளர்கள், முகவர்களின் வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்கள், ஓட்டு எண்ணும் மையங்களிலும் பல்வேறு கோணங்களில் வெப் கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
ஓட்டு எண்ணும் வளாகத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயதப்படையினர் என சுழற்சி முறையில் பணி செய்கின்றனர். எஸ்.பி., ஜவகர் தலைமையில் ஆறு டி.எஸ்.பி.,க்கள் உட்பட, 900 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.