காங்கேயம், தாராபுரத்தில் லோக் அதாலத்
காங்கேயம், தாராபுரத்தில் லோக் அதாலத்
காங்கேயம், தாராபுரத்தில் லோக் அதாலத்
ADDED : ஜூன் 09, 2024 04:01 AM
காங்கேயம்: காங்கேயம் நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, வக்கீல் தமிழ்செல்வம் முதல் அமர்விலும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி, வக்கீல் குப்புசாமி ஆகியோர் இரண்டாம் அமர்விலும், குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார், வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் மூன்றாம் அமர்விலும் பங்கேற்றனர்.
மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, குடும்ப நல வழக்கு, சொத்து வழக்கு என மொத்தம், 356 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 308 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்கு சமரச தொகையாக, 2.௧௭ கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது. காங்கேயம் குற்றவியல் நீதிமன்றத்தில், 2023ம் ஆண்டு முதல் நடந்த ஒரு தம்பதியின் ஜீவனாம்ச வழக்கில், ஜீவனாம்ச தீர்வு தொகையாக, 10 லட்சம் ரூபாயை, குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார், மனுதாரருக்கு வழங்கினார்.
* தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மினோ, தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுத்தலைவரும், சார்பு நீதிபதியுமான சக்திவேல் தலைமை வகித்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
இதில், 20 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 45 உரிமையியல் வழக்குகள், 106 குற்றவியல் என, 171 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இந்த வழக்குகளுக்கு சமரச தொகையாக, 12.48 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.