/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திருமண தடை நீக்கும் யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு திருமண தடை நீக்கும் யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருமண தடை நீக்கும் யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருமண தடை நீக்கும் யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருமண தடை நீக்கும் யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED : ஜூன் 09, 2024 04:02 AM
சத்தி: சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையம், கொருமடுவு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 28வது ஆண்டுவிழா மற்றும் திருமணத்தடை நீக்கும் பார்வதி சுயம்வரா யாகம் நேற்று நடந்தது. இதில் ஆண்கள் வாழை மரத்துக்கும், பெண்கள் பாலை மரத்துக்கும் மாலை அணிவித்து மாங்கல்ய தோஷத்தை நீக்கினர்.
இதில்லாமல் ராகு-கேது தோஷம், சனிதோஷம், நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்க சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மகாபூர்ணாகுதி பூஜை, சிவன்-பார்வதி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இல் ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருமணமாகாத ஆண்கள், பெண்கள் உட்பட, 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனிச்சாமி தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.