/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வெள்ளகோவில் நகரத்தில் 12 டன் குப்பை அகற்றம்வெள்ளகோவில் நகரத்தில் 12 டன் குப்பை அகற்றம்
வெள்ளகோவில் நகரத்தில் 12 டன் குப்பை அகற்றம்
வெள்ளகோவில் நகரத்தில் 12 டன் குப்பை அகற்றம்
வெள்ளகோவில் நகரத்தில் 12 டன் குப்பை அகற்றம்
ADDED : பிப் 02, 2024 10:22 AM
வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், 12 டன் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் உள்ள சாக்கடைகளில், வீட்டு குப்பை, வியாபார கடைகளின் குப்பை, அழுகிய பழங்கள், பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள், பாட்டில்கள், அழுகிய துணிகள், பழைய துணிகள் போன்றவைகளை கொட்டியதால் சாக்கடை அடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால், மழை நீர் சாக்கடையில் செல்லாமல் ரோட்டில் ஓடியது. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அடைபட்ட சாக்கடையை சுத்தம் செய்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய பஸ் நிலையம் முதல் புது பஸ் நிலையம் செல்லும் பகுதியில் சாக்கடையை சுத்தம் மேற்கொண்டதில், பிளாஸ்டிக் கழிவு, குப்பை, மண் என, 12 டன் வரை அகற்றப்பட்டது.


