ADDED : அக் 14, 2025 02:00 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 242 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்காலிக துாய்மை பணியாளர் மூன்று நபர்களின் வாரிசுதாரர்களுக்கு, 9,500 ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், கலால் உதவி இயக்குனர் தியாகராஜன், தாட்கோ மாவட்ட துணை மேலாளர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


