சாலையில் சாய்ந்த லாரியால் பரபரப்பு
சாலையில் சாய்ந்த லாரியால் பரபரப்பு
சாலையில் சாய்ந்த லாரியால் பரபரப்பு
ADDED : அக் 15, 2025 12:54 AM
ஈரோடு, ஈரோடு கூட்ஸ் ஷெட்டில் இருந்து உரம் ஏற்றிய ஒரு லாரி நாடார்மேடு பகுதிக்கு நேற்று மாலை, 6:35 மணியளவில் சென்றது.
சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் வலப்புறமாக சாய்ந்தபடி நின்றது. எந்நேரத்திலும் சாயும் நிலை காணப்பட்டது. இதனால் லாரியின் பின்னால் சென்ற வாகனங்கள், சிறிது நேரம் அணிவகுத்து நின்றன.
அதேசமயம் இடப்புறம் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு இடம் இருந்தது.
சூரம்பட்டி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். உர மூட்டைகளை வேறு லாரிக்கு மாற்றி கிரேன் உதவியுடன் கொண்டு செல்லப்படும் என்று, போலீசார் தெரிவித்தனர்.


