/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி
வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி
வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி
வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி
ADDED : செப் 25, 2025 01:51 AM
கோபி, :கோபி அருகே கலிங்கியம் கிராமத்தில், வேளாண் கல்லுாரி மாணவ, மாணவியர், நெல் நடவு குறித்த களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.வேளாண்மை கள அனுபவ கல்விக்காக, கோவையை சேர்ந்த வேளாண் கல்லுாரி மாணவ, மாணவியர், கோபி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பயிற்சி பெற்று வருகின்றனர். விவசாயிகள் எவ்வாறு சாகுபடி செய்கின்றனர்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, கற்றல் அனுபவத்தை கள அளவில் சேகரித்து வருகின்றனர். மேலும், புதிய வேளாண்மை தொழில் நுட்பங்களை செயல்விளக்கம் மூலம் செய்து காட்டுகின்றனர்.
கோபி அருகே கலிங்கியம் கிராமத்தில், விவசாயிகளின் பண்ணையில் நிலம் தயாரிப்பு மற்றும் நெல் நாற்று நடவு செய்யும் களப்பயிற்சியில், வேளாண் கல்லுாரி மாணவ, மாணவியர், 54 பேர் பங்கேற்றனர்.