ADDED : ஜூன் 12, 2025 01:41 AM
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பராமரிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை, நகர் மன்ற தலைவர் நேற்று திறந்து வைத்தார்.
தாராபுரம், 19வது வார்டுக்கு உட்பட்ட தேவேந்திர தெருவில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதியதாக பராமரிப்பு செய்யப்பட்ட அங்கன்வாடி மையத்தை, தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல், நகராட்சி பொறியாளர் சுகந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.