/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தேர்வு வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதேர்வு வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தேர்வு வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தேர்வு வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தேர்வு வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ADDED : பிப் 02, 2024 10:18 AM
ஈரோடு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) மூலம் பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான நியமன தேர்வு வரும், 4ல் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஐந்து மையத்தில் 1,552 பேர் எழுதுகின்றனர்.
இதே போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - -மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி திறன் படிப்பு (என்.எம்.எம்.எஸ்.,) உதவி திட்டத்தின் நடப்பாண்டுக்கான தேர்வு நாளை (3ல்) நடக்கிறது. 26 மையத்தில், 6,137 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவ்விரு தேர்வுக்கான வினாத்தாள் கடந்த, 30ல் ஈரோடு வந்தது. வினாத்தாள்கள் ஈரோடு ப.செ.பார்க்கில் உள்ள, தகைசால் பள்ளியில் வைத்து பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள் வைத்துள்ள அறைக்கு உள்ளே, வெளியே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும், 300 ஆசிரியை, ஆசிரியர்களுக்கு தேர்வு வழிகாட்டு நெறிமுறை குறித்த கூட்டம், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.


