Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்

ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்

ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்

ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்

ADDED : மே 12, 2025 03:19 AM


Google News
ஈரோடு: ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இப்பகுதியில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், நீரோட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காரை வாய்க்கால் பகுதி காலிங்கராயன் வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. ஏப்.,30ல் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

ஒரு மாதத்தில் மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் வாய்க்காலில் ஆகாயத்தா-மரை ஆக்ரமித்துள்ளதால், நீரோட்டம் வெகுவாக தடைபடும். வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கரையில் வெளியேறும் நிலை உள்-ளது. விரைந்து ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us