/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓடையில் துார்வாரும் பணியில் தடை இதுவரை 60 டன் கழிவு அகற்றம் ஓடையில் துார்வாரும் பணியில் தடை இதுவரை 60 டன் கழிவு அகற்றம்
ஓடையில் துார்வாரும் பணியில் தடை இதுவரை 60 டன் கழிவு அகற்றம்
ஓடையில் துார்வாரும் பணியில் தடை இதுவரை 60 டன் கழிவு அகற்றம்
ஓடையில் துார்வாரும் பணியில் தடை இதுவரை 60 டன் கழிவு அகற்றம்
ADDED : செப் 24, 2025 01:10 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 59 வது வார்டுக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி அருகில் செல்லும் ஓடையை துார்வாராததால், மழை காலத்தில் கழிவுநீருடன் மழைநீர் வீதிக்குள் நுழைவது தொடர் கதையாக உள்ளது.
கடந்த, 19, 21 தேதிகளில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதி வழக்கம்போல் வெள்ளக்காடாக மாறியது. பணியில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டிய நிலையில், 22ம் தேதி கலெக்டர் கந்தசாமி களமிறங்கினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து ஓடையை துார்வாரும் பணிகளை துவக்கி வைத்தார்.
இரண்டாவது நாளாக நேற்றும் பணி மும்மரமாக நடந்த நிலையில், வாகனத்தில் ஏற்பட்ட பழுதால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஓடை துார்வாரும் பணியில் இதுவரை, 60 டன்னுக்கு மேல் கழிவுகளை அகற்றியுள்ளோம். ஓடையை ஒட்டியுள்ள ஐந்து வீடுகள் வழியாக தான் தண்ணீர் வீதிக்குள் வருகிறது. எனவே அந்த பகுதியை மேடாக உயர்த்தி வருகிறோம். அதேபோல் ரயில்வே பாதை டனலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியது. அதை சரிசெய்யும் போது தான் ஹிட்டாச்சி வாகனத்தில் பெல்ட் துண்டாகி விட்டது. இதனால் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.வாகனம் சரி செய்த பிறகு நாளை (இன்று) முதல் துார்வாரும் பணி தொடர்ந்து நடக்கும். இவ்வாறு கூறினர்.