ADDED : செப் 20, 2025 01:36 AM
சத்தியமங்கலம், அ.தி.மு.க.,வினர் ஒன்று சேர வலியுறுத்தி, சத்தியமங்கலத்தில் நேற்று உண்ணாவிரதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி மறுத்ததால் உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க., தொண்டரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் நுாற்றுக்கணக்கானோர், எஸ்.பி.எஸ்., கார்னரில் இருந்து ஊர்வலமாக சென்று, வாகனங்களில் ஏறி கோபி தொகுதி எம்.எல்.ஏ., செங்கோட்டையனை சந்திக்க சென்றனர்.


