/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்கால் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் வாய்க்கால் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்
வாய்க்கால் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்
வாய்க்கால் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்
வாய்க்கால் புனரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்
ADDED : செப் 24, 2025 01:16 AM
ஈரோடு, : பவானி, காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், ஈரோடு, சாவடிப்பாளையம், ஊஞ்சலுார், கொடுமுடி, ஆவுடையார்பாறையில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. வாய்க்கால் மூலம், 15,743 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்காலில் ஆலைக்கழிவு, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு கழிவு நீர் கலப்பதை தடுக்க, பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்க்காலை புனரமைக்கவும், சில இடங்களில் புதுப்பித்து பேபி வாய்க்கால் விரிவுபடுத்த நீர் வளத்துறை அரசுக்கு பரிந்துரைத்தது. இப்பணிக்கு, 83.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிப்., மாதம் துவங்க உள்ளது. இதுதொடர்பாக கருத்து கேட்பு கூட்டம், ஈரோடு கீழ்பவானி வடிநில கோட்ட நீர் வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இறுதி முடிவு எட்டவில்லை.
இதனால் வரும், 29ல் அடுத்த கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளின் இசைவு கிடைத்த பின்னரே பணி துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.