/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நெல் கொள்முதலில் பணம் வசூலிப்பு புகார்; அதிகாரிகள் சோதனைநெல் கொள்முதலில் பணம் வசூலிப்பு புகார்; அதிகாரிகள் சோதனை
நெல் கொள்முதலில் பணம் வசூலிப்பு புகார்; அதிகாரிகள் சோதனை
நெல் கொள்முதலில் பணம் வசூலிப்பு புகார்; அதிகாரிகள் சோதனை
நெல் கொள்முதலில் பணம் வசூலிப்பு புகார்; அதிகாரிகள் சோதனை
ADDED : பிப் 02, 2024 10:17 AM
ஈரோடு: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம், நெல்லுக்கு பணம் பெறுவதாக புகார் எழுந்த நிலையில், நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில், கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 36 இடங்களில் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை, 800 டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோ நெல்லுக்கு, 1 ரூபாய் முதல் மூட்டைக்கு, 50 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து ஆய்வு செய்யும்படி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதிக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். நேற்று மண்டல மேலாளர் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் கோபி நாதிபாளையம், காசிபாளையம், சிங்கிரிபாளையம், புதுப்பாளையம் உட்பட, பல நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
கட்டண வசூல் குறித்து விவசாயிகள், ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. இருப்பினும், விவசாயிகள் புகார் தெரிவிக்க வசதியாக, அதிகாரிகள் மொபைல் போன் எண்கள், பலகையில் வைக்க உத்தரவிட்டனர். கட்டண வசூலில் சிக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்து சென்றனர்.


