/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கவர்னரை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்கவர்னரை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
கவர்னரை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
கவர்னரை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
கவர்னரை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 28, 2024 10:31 AM
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில் தமிழக கவர்னர் ரவியை கண்டித்து, ஈரோடு சூரம்பட்டி, 4 ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவர்னர் ரவி, சமீபத்தில் பேசுகையில், 'காந்தியால் சுதந்திரம் பெற்றுத்தரப்படவில்லை. நேதாஜியே முக்கிய காரணம்' என்ற ரீதியில் பேசினார். இச்செயல் காந்தியையும், அகிம்சைவாத செயல்பாட்டையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது எனக்கூறி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா ஆகியோர் பேசினர். மகிளா காங்., தலைவி ஞானதீபம், வக்கீல் சித்ரா, கிருஷ்ணவேணி, சந்துரு, அர்ஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஈரோடு, மூலப்பாளையத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர்
மக்கள்ராஜன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், செந்தில்ராஜா, ஈஸ்வரமூர்த்தி, ரவி, சண்முகம், முருகேஷ், ராவுத்குமார், இலக்கியசெல்வன், வேணுகா உட்பட பலர்
பங்கேற்றனர்.