இரு பிரிவுகளில் டிரைவர் மீது வழக்கு
இரு பிரிவுகளில் டிரைவர் மீது வழக்கு
இரு பிரிவுகளில் டிரைவர் மீது வழக்கு
ADDED : அக் 12, 2025 02:04 AM
ஈரோடு:சித்தோடு ராயபாளையத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 35, டிரைவர். பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்தார். சிறுமி இரண்டு மாத கர்ப்பமானார். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது, சிறுமியின் வயது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பவானி அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், மோகனசுந்தரம் மீது வழக்குப்பதிந்தனர்.


