ADDED : அக் 19, 2025 02:50 AM
காங்கேயம்: ஊதியூர் அருகே கொடுவாயில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, ஊதியூர் போலீசார் கொடுவாய் சக்தி விநாயகர் புரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சூதாடி கொண்டிருந்த கொடுவாய் மாரப்பன், 60, குமார், 39, சாமிநாதன், 50, சுப்பிரமணி, 50, நாகராஜ், 40, ஆகியோரை கைது செய்து, 4,௦௦௦ ரூபாயை பறிமுதல் செய்தனர்.


