ADDED : அக் 24, 2025 01:08 AM
அந்தியூர், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம்-கர்நாடாக இடையிலான பர்கூர்மலை சாலையில் மண் சரிவு, மரம் முறிந்து விழுவது போன்ற சம்பவம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் இரவில் பர்கூர் மலைப்பாதை வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று, அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம் தாமரைக்கரையிலிருந்து வரட்டுப்பள்ளம் அடிவாரம் வரை, மலைப்பாதையில் மழைநீர் தடையின்றி செல்ல, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் பராமரிப்பு பணி நேற்று நடந்தது.


