/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காமராஜ் கல்வி நிறுவனம் சார்பில் நம்பியூரில் மாரத்தான் போட்டி காமராஜ் கல்வி நிறுவனம் சார்பில் நம்பியூரில் மாரத்தான் போட்டி
காமராஜ் கல்வி நிறுவனம் சார்பில் நம்பியூரில் மாரத்தான் போட்டி
காமராஜ் கல்வி நிறுவனம் சார்பில் நம்பியூரில் மாரத்தான் போட்டி
காமராஜ் கல்வி நிறுவனம் சார்பில் நம்பியூரில் மாரத்தான் போட்டி
ADDED : செப் 26, 2025 01:22 AM
நம்பியூர், நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கருப்புசாமி நினைவாக, மாநில அளவிலான மராத்தான் போட்டி வரும், 28ம் தேதி நம்பியூரில் நடக்கிறது. போதையில்லா சமூகம் மலர, நம்பியூர் பஸ் நிலையத்தில் தொடங்கி, மூணாம்பள்ளி எல்.பி.பி., வாய்க்கால் வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைகிறது.
இதில், 5 முதல் 12 வயது வரை, 13 முதல் 19 வயது வரை, 20 முதல் 40 வயது வரை, 40க்கு மேற்பட்டோர் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண், பெண்களுக்கு தனித்தனியே பரிசு வழங்கப்படவுள்ளது. ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., தலைவர் சரவணன், போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.
அதை தொடர்ந்து அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். போட்டிகளில் அனைவரும் கலந்து கொள்ள, காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜவகர், செயலர் சுமதி ஜவகர் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.