மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி
மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி
மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி
ADDED : ஜூன் 12, 2025 01:30 AM
கோபி, கோபி அருகே வெள்ளாளபாளையம்-முருகன்புதுார் சாலை, குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.
கோபி அருகே வெள்ளாளபாளையம் கிராமத்தில் இருந்து, முருகன்புதுார் வழிச்சாலை உள்ளது. விவசாயிகள் நிலங்கள் சூழ்ந்த பகுதியில் வலம் வரும் சாலை, பல இடங்களில், குண்டும், குழியாக, கரடு, முரடாக உள்ளது. தார்வாசம் காணாத சாலையில், விவசாய பணியாக சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்வோர், பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக தினமும் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில், அவ்வழியே செல்வோர் அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது கோபி யூனியன் நிர்வாகம், தார்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.