/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு பனையம்பள்ளியில் மக்கள் சாலை மறியல் குடிநீர் கேட்டு பனையம்பள்ளியில் மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பனையம்பள்ளியில் மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பனையம்பள்ளியில் மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பனையம்பள்ளியில் மக்கள் சாலை மறியல்
ADDED : செப் 19, 2025 01:33 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அடுத்த பனையம்பள்ளி பஞ்., பகுதியில், 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் ஆவேசமடைந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பனையம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் காலி குடங்களுடன் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் மேற்கொண்டு செல்லமுடியாமல் போக்குவரத்து பாதித்தது.
புன்செய்புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பவானிசாகர் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. பிரச்னையை சரி செய்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும், அப்போதுதான் செல்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே, மறியலை கைவிட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.