Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கரூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

கரூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

கரூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

கரூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ADDED : அக் 03, 2025 01:37 AM


Google News
கரூர், :கரூர் அருகே, திருச்சி ரயில்வே இருப்பு பாதையில், கட்டளையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. கரூர்-திருச்சி இடையே நாள்தோறும், 30க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், ரயில்கள் செல்லும் போது, கட்டளையில் உள்ள கேட் மூடப் படுகிறது. அந்த சமயத்தில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கட்டளை, மேல மாயனுார் பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியவில்லை.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: கரூர் அருகே கட்டளை சுற்று வட்டார பகுதிகளில், வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளது. அதனிடையே ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்ட போதே, பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், சிறிய குகை வழிப் பாதை மட்டும் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் அந்த வழியாக செல்ல முடியவில்லை. கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் முக்கிய பாதையாக மாறி வருகிறது.

அதிக ரயில்கள் செல்ல வாய்ப்புள்ளது. தற்போது, மின் பாதை அமைக்கப்பட்டு ள்ளதால், வரும் காலங்களில் அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். ரயில்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதனால், கரூர்-சேலம் ரயில்வே வழித்தடத்தில் கட்டளை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us