/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீடுகளை சுற்றி நிறுத்தப்படும் மாணவர் சைக்கிளால் குடியிருப்புவாசிகள் அவதி வீடுகளை சுற்றி நிறுத்தப்படும் மாணவர் சைக்கிளால் குடியிருப்புவாசிகள் அவதி
வீடுகளை சுற்றி நிறுத்தப்படும் மாணவர் சைக்கிளால் குடியிருப்புவாசிகள் அவதி
வீடுகளை சுற்றி நிறுத்தப்படும் மாணவர் சைக்கிளால் குடியிருப்புவாசிகள் அவதி
வீடுகளை சுற்றி நிறுத்தப்படும் மாணவர் சைக்கிளால் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : செப் 26, 2025 01:17 AM
ஈரோடு :ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. மாணவ, மாணவியர் சைக்கிளை நிறுத்த பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் பள்ளிக்கு எதிரே நிறுத்துகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. நுாற்றுக்கணக்கான சைக்கிள் நிறுத்தப்படுவதால், குடியிருப்புவாசிகள் தங்கள் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த முடியாத நிலை தொடர்கிறது.
இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
மாணவ, மாணவிகள் சைக்கிளை நிறுத்துவதால் எங்கள் வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. இதனால் வாகனங்களும் திருட்டு போகும் நிலை உள்ளது. இது தவிர வாகனங்கள் சேதமாகி விடுகிறது. பள்ளிக்கு தனியாக இடவசதி உள்ளது. அங்கு சைக்கிளை நிறுத்தி கொள்ள, பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரிரு ஆண்டுகளாக அல்ல. பல ஆண்டுகளாகவே இந்நிலை தான் தொடர்கிறது. சில குறும்புகார மாணவர்களால் குடியிருப்பு பகுதியில் தொல்லையும் ஏற்படுகிறது. இவ்வாறு கூறினர்.
இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி கூறியதாவது: பள்ளியில் இருந்து சிறிது துாரம் தள்ளி பள்ளிக்கு சொந்தமான இடம் இருப்பது உண்மை தான். ஆனால் பள்ளிக்கு முன்புறம் கண் பார்வையில் இருக்கும் போதே சைக்கிள் திருட்டு போகிறது. கண் காணாத இடத்தில் நிறுத்தினால் அதிக சைக்கிள் காணாமல் போகும். அந்த இடத்துக்கு காவலாளி போட முடியாது. ஏனெனில் பள்ளி காவலாளிக்கே எங்கள் சொந்த செலவில் தான் சம்பளம் கொடுக்கிறோம். குடியிருப்புவாசிகள் நடந்து சென்று வர பிரச்னை இருந்து தெரிவித்தால், அங்கு சைக்கிளை நிறுத்த விடாமல் செய்யலாம். சைக்கிளை நிறுத்த கூடாது என்று சொல்பவர்களின் குழந்தைகள் கூட இப்பள்ளியில் தான் பயில்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.