Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா யாக பூஜையுடன் தொடக்கம்

சென்னிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா யாக பூஜையுடன் தொடக்கம்

சென்னிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா யாக பூஜையுடன் தொடக்கம்

சென்னிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா யாக பூஜையுடன் தொடக்கம்

ADDED : அக் 23, 2025 01:57 AM


Google News
சென்னிமலை, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமான, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று யாக பூஜையுடன் தொடங்கியது.

நேற்று காலை, 8:10 மணிக்கு சென்னி

மலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, சுப்பிரமணியர் சமேதராக உற்சவ மூர்த்திகளை, 1,320 படிக்கட்டுகள் வழியாக, மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த, யாக சாலையில் விநாயகர் வழிபாடு. யாக பூஜை, ேஹாமங்கள் நடந்தன. பின், 108 வகையான திரவியங்களுடன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிேஷகம், சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுாவமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற, விரதத்தை தொடங்கும் முகமாக கைகளில் காப்பு கட்டி கொண்டனர். பக்தர்களுக்கு தலைமை குருக்கள் ராமநாதசிவச்சாரியார் காப்பு கட்டினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கந்த சஷ்டி விழா வரும், 27ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 27 மாலை, 5:40 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து, படிக்கட்டுகள் வழியாக, உற்சவமூர்த்திகளை அடிவாரத்திற்கு அழைத்து வந்து. அங்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கும். இரவு 8:30 மணிக்கு மேல், சென்னிமலை நகரில் நான்கு ராஜ வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.

* ஈரோடு திண்டல் வேலாயுத

சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் துவங்கியது. மாலை 4.30க்கு விரதமிருப்பவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

* புன்செய்புளியம்பட்டி, சுப்பிரமணியர் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. 27ம் தேதி முருகப்பெருமான் அம்மனிடம் வேல் பெறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா, கோவில் திடலில் நடக்கிறது. 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையை மணம் செய்யும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

* கோபி அருகே பச்சைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதேபோல் பவளமலை முத்துக்

குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா நேற்று காலை 10:00 மணிக்கு விநாயகர் பூஜையுடனும், காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

* தாராபுரம், சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி, நேற்று காலை கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள், சாமி முன் விரத கங்கணம் அணிந்தனர். மேலும் லட்சார்ச்சனை துவங்கி நடைபெறுகிறது.

* திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று மதியம் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின், உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். சுவாமி கோவிலை சுற்றி வலம் வந்து, மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் கோவிலுக்கு சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 27ம் தேதி சூரசம்ஹாரா விழா மாலை 5:00 மணிக்கும், 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us