Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிற்சாலைகளில் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்

தொழிற்சாலைகளில் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்

தொழிற்சாலைகளில் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்

தொழிற்சாலைகளில் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்

ADDED : டிச 02, 2025 02:53 AM


Google News
திருப்பூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள சட்டசபை தொகுதிகளிலும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட் யல் தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. இப்பணியில், 2,536 பி.எல்.ஓ.,க்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர் ஈடுபட்டுள்ளனர். பின்னலாடை தொழிலாளர் அதிகமுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளில் பூர்த்தி செய்த படிவங்கள் வருகை மந்தகதியில் உள்ளது. இதற்கான அவகாசத்தை, 11ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து வாக்காளரிடமிருந்தும் தீவிர திருத்த படிவங்களை பூர்த்தி செய்து பெற, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுகின்றனர்.

இதுகுறித்து ஆலோசிக்க, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து அரசு துறை அலுவலர்கள் மத்தியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:

தீவிர திருத்த படிவங்களை பெறுவதற்கு வரும், 11ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. படிவங்களில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டியிருப்பதால், ஓரிரு நாட்களுக்கு முன்னரே, தகுதியுள்ள அனைத்து வாக்காளரிடமிருந்தும் படிவங்களை பூர்த்தி செய்து பெறும்வகையில், திட்டு செயல்பட வேண்டும். அரசு அலுவலர்கள், தங்களது சுய படிவங்கள் மற்றும் குடும்பத்தினரின் படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து, தங்கள் ஓட்டுரிமையை பார்த்துக்கொள்ள செய்துகொள்ளவேண்டும். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, பல்லடம் தொகுதிகளில், படிவங்கள் திரும்ப பெறும் விகிதம் மிக குறைவாக உள்ளது. மூன்று தொகுதிகளிலும், அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகள், தொழில் பூங்காக்களில் முகாம் நடத்தி, தொழிலாளர் மத்தியில் தீவிர திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அவர்களிடமிருந்து படிவங்களை பூர்த்தி செய்து பெறவேண்டும். இவ்வாறு பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us