ADDED : ஜூன் 10, 2024 02:01 AM
பாறைகளிடையே சிக்கி
போராடிய யானை மீட்பு
அந்தியூர்,: பர்கூர் வனப்பகுதி ஊசிமலையில், நேற்று காலை ஒரு ஆண் யானை, இரண்டு பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து விட்டு, பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி, யானையை வெ ளியேற செய்தனர். இதன் பிறகு யானை
வனப்பகுதிக்குள் சென்றது.
மகுடேஸ்வரர் கோவிலில்
ரூ.20.39 லட்சம் காணிக்கை
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில், 20 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இவற்றை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கப்பணமாக, 20.39 லட்சம் ரூபாய், 13 கிராம் பலமாற்று தங்கம், 164 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.