ADDED : செப் 25, 2025 02:16 AM
தாராபுரம் :திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பூங்கா சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று காலை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில், பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் குறித்த மனுக்களை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்தனர். இதில், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்கள் அளித்த மனுக்களை, ஆய்வு செய்தனர்.