ADDED : மே 15, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி ஓலபாளையம் நேரு வீதியை சேர்ந்த அய்யன்துரை-லட்சுமி மகள் சத்ய பிரியா, 17; தம்பதியர் கூலி தொழிலாளர்கள். மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 முடித்து விட்டு சத்யபிரியா வீட்டில் இருந்தார்.
பெற்றோர் சொல்லும் வேலையை செய்யாமலும், அதீத முன்கோபத்திலும் பெற்றோருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த, 13ல் அய்யன்துரை, மகளை கடிந்து கொண்ட நிலையில், வேலைக்கு சென்று விட்டார். லட்சுமியும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சத்யபிரியா, பாத்ரூமில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





