ADDED : ஜூன் 14, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம், விவசாயிகளுக்கு
புதிய சன்ன அரிசி நெல் ரகங்கள், அதன் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த
பயிற்சி வழங்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் சசிகலா தலைமை வகித்து,
புதிய சன்ன அரிசி நெல் ரகங்கள், சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து
பயிற்சி வழங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியா, மண்
பரிசோதனை முடிவுப்படி சமச்சீர் முறையில் உர மேலாண்மை செய்ய
வலியுறுத்தினார். சன்ன அரிசி நெல் ரகங்கள், சாகுபடி தொழில்
நுட்பங்களை விவசாயி கருப்பண்ணசாமி செயல் விளக்கம் மூலம்
விளக்கினார். அலுவலர்கள் கிருத்திகா, செங்கோட்டையன் உட்பட பலர்
பங்கேற்றனர்.
