/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு
நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு
நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு
நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு
ADDED : செப் 28, 2025 02:07 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள், விதைகள் கையிருப்பு உள்ளது.இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது: மாவட்டத்தின் இயல்பு ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு கடந்த, 26 வரை, 335.48 மி.மீ., வரை பதிவாகி உள்ளது. நடப்பாண்டில் வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதைகள்-215.4 டன், சிறு தானியங்கள் - 65.4 டன், பயறு வகைகள் - 44.8 டன், எண்ணெய் வித்துக்கள் - 92 டன் என, 417.6 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்களான யூரியா - 2,715.7 டன், டி.ஏ.பி., - 2,934 டன், பொட்டாஷ் - 2,202 டன், காம்ப்ளக்ஸ் - 7,520 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், அந்தந்த பகுதி வட்டார, துணை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


