ADDED : அக் 09, 2025 12:57 AM
ஈரோடு, நடப்பு 2025-26ம் ஆண்டு, இரண்டாம்பருவத்திற்கு உரிய இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி அளிக்க, முதற்கட்டமாக மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கு மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒரு ஒன்றியத்துக்கு இரண்டு பேர் என மொத்தம் 28 கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார்.


