ADDED : ஆக 12, 2026 06:45 AM

அ நிறம் | அளவு
பவானி:பவானி
அடுத்த அத்தாணி டெம்போ ஸ்டாண்ட் எதிர்புறம் காய்கறி மார்க்கெட்
உள்ளது. இங்கு பழமை வாய்ந்த வாகை மரம் இருந்தது. நடுப்பகுதி சேதமாகி
முறிந்து விழும் நிலையில் இருந்தது. மரத்தின் அடிப்பகுதியில்
செவ்வாய்கிழமை தோறும் காய்கறி சந்தை காலை முதல் மதியம் வரை நடப்பது
வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் பலத்த காற்று வீசியதில், வாகை மரம்
முறிந்து விழுந்தது.
கிளைகள் பட்டதில் மின் கம்பம் முறிந்து கம்பிகள்
அறுந்து விழுந்தன. அப்போது மின்தடை ஏற்பட்டிருந்ததால்ஸ,
அதிர்ஷ்டவசமாக காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள்
தப்பினர். அத்தாணி டவுன் பஞ்., நிர்வாகத்தினர், மின் ஊழியர்கள்
மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்
