/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொத்தடிமை தொழிலாளர் முறை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொத்தடிமை தொழிலாளர் முறை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
கொத்தடிமை தொழிலாளர் முறை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
கொத்தடிமை தொழிலாளர் முறை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
கொத்தடிமை தொழிலாளர் முறை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
ADDED : செப் 26, 2025 01:25 AM
திருப்பூர், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிற்சி முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் மனிஷ் தலைமை வகித்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் தொடர்பாக, பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளர் பணிபுரிகின்றனரா என கண்டறிந்து, மீட்கவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகை பெற்றுக்கொடுத்து, மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கொத்தடிமை தொழிலாளர் அதிகம் பணிபுரிய வாய்ப்பு உள்ள இடங்களான, கோழிப்பண்ணை, கரும்பு வெட்டும் தொழில், செங்கல்சூளை, தறி பட்டறைகள், தேங்காய் களம் ஆகியவற்றில் ஆய்வுகள் நடத்தவேண்டும்.
கொத்தடிமை தொழிலாளர்களை பணி அமர்த்தும் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொத்தடிமை தொழிலாளர் தொடர்பாக, 1800 4252650 என்கிற எண்ணில் அல்லது 155214, 112 ஆகிய இலவச எண்களில் புகார் அளிக்கலாம்.