/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
புன்செய்புளியம்பட்டி : புன்செய் புளியம்பட்டி அடுத்த காராப்பாடி பஞ்., கண்டிசாலை பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதி மக்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.இதை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை காவிலிபாளையம் சாலையில், சின்னான் குட்டை பிரிவு அருகே சாலையில் மரக்கிளைகளை வெட்டி போட்டு காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புன்செய் புளியம்பட்டி போலீசார் மற்றும் காரப்பாடி பஞ்., தலைவர் சாந்தி ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள், மின் மோட்டார் ரிப்பேர் ஆகி விட்டதால் ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுளோம், உடனடியாக மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர். விரைவில் மின் மோட்டார் பழுது நீக்கப்பட்டு, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்., நிர்வாகம் சார்பில் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.