ADDED : ஜூன் 15, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூரை அடுத்த புன்னம் பாலம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சதீஷ்குமார், 35, திருமுருகன், 32; இருவரும் பவானியில் இருந்து சொந்த ஊருக்கு ராயல் என்பீல்டு பைக்கில், சென்றனர்.
பருவாச்சி அருகே காந்திநகர் என்ற இடத்தில், எதிரே வந்த ஸ்விப்ட் கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, பவானி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சதீஷ்குமார் செல்லும் வழியில் இறந்தார். திருமுருகன் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கார் டிரைவரான கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கவுதம் மீது, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
