/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இரண்டாம் திருமணம் செய்த கணவன், பெண் மீது வழக்கு இரண்டாம் திருமணம் செய்த கணவன், பெண் மீது வழக்கு
இரண்டாம் திருமணம் செய்த கணவன், பெண் மீது வழக்கு
இரண்டாம் திருமணம் செய்த கணவன், பெண் மீது வழக்கு
இரண்டாம் திருமணம் செய்த கணவன், பெண் மீது வழக்கு
ADDED : ஜூன் 13, 2024 12:19 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவன் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்தவர் சங்கர் மனைவி ஜெகதீஸ்வரி,33; இருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்து, இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர். கணவன் சங்கர் தினமும் மதுபோதையில் மனைவி ஜெகதீஸ்வரியை தாக்கி கொடுமைபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் சங்கருக்கும், குன்னியூரை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து கேட்ட ஜெகதீஸ்வரியை, கணவன் சங்கர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கர் மற்றும் சந்தியா ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.