/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 13, 2024 08:22 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில் நடந்த குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளில் ஈடுபடுத்த மாட்டேன். பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.
முன்னதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை டி.ஆர்.ஓ., கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்.
இதில், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், சிவரஞ்சனி, தொழிலாளர் முத்திரை ஆய்வாளர் மேகநாதன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.