/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை
விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை
விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை
விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 13, 2024 09:45 PM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் விவசாயி வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சன் மகன் இளையாப்பிள்ளை, 36; விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் வீட்டின் மாடியில் நேற்று முன் தினம் இரவு துாங்கினார்.
நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகைகள் மற்றும் 2,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.