/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உலக தரத்திலான பணிமனை: கலெக்டர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உலக தரத்திலான பணிமனை: கலெக்டர்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உலக தரத்திலான பணிமனை: கலெக்டர்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உலக தரத்திலான பணிமனை: கலெக்டர்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உலக தரத்திலான பணிமனை: கலெக்டர்
ADDED : ஜூன் 15, 2024 06:35 AM
கள்ளக்குறிச்சி: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள உலக தரத்திலான பணிமனைகளை இளைஞர்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பொருத்துனர், கடைசலர், கம்மியர் மோட்டார் வண்டி, மின்சார பணியாளர், கம்மியர் குளிர்ப்பதனம் மற்றும் தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்துதல், இயந்திர பட வரைவாளர், பொருத்துனர், கணினி இயக்குபவர், பற்றவைப்பவர், கம்பியாள், உலோகதகடு வேலையாள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உலக தரத்திலான பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் பொருட்டு அட்வான்ஸ்டு சி.என்.சி., மெக்கானிக், எலக்டரிக் வாகன மெக்கானிக் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு பிரிவு, ஆட்டோமேஷன் தொழிற்பயிற்சி பிரிவுகள் துவங்கப்பட்டுள்து.
மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை 750 ரூபாய் வழங்கப்படுகிறது.
அரசு வழங்கும் இலவச சலுகைகளாக மிதிவண்டி, சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் பாடபுத்தகங்கள் வழங்கப்படுகிறது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உடனடியாக சேர்ந்து தொழிற்பயிற்சி பெற்று சுய தொழில் செய்து வாழ்வில் வெற்றியடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.