/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் 'அட்மிட்'பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் 'அட்மிட்'
பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் 'அட்மிட்'
பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் 'அட்மிட்'
பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் 'அட்மிட்'
ADDED : ஜன 10, 2024 11:41 PM
ரிஷிவந்தியம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், அவிரியூர் அரசு நடுநிலைப்பள்ளியில், 153 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தில் தினமும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
நேற்று காலை 8:00 மணிக்கு 96 மாணவர்களுக்கு வெண்பொங்கல் பரிமாறியபோது, அதில் பல்லி இறந்து கிடந்தது. அதை சாப்பிட்ட 10 மாணவர்கள் மற்றும் 3 சமையலர்களுக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


