/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் சார்பு நீதிமன்றத்தில் ரூ. 1.26 கோடிக்கு சமரச தீர்வு திருக்கோவிலுார் சார்பு நீதிமன்றத்தில் ரூ. 1.26 கோடிக்கு சமரச தீர்வு
திருக்கோவிலுார் சார்பு நீதிமன்றத்தில் ரூ. 1.26 கோடிக்கு சமரச தீர்வு
திருக்கோவிலுார் சார்பு நீதிமன்றத்தில் ரூ. 1.26 கோடிக்கு சமரச தீர்வு
திருக்கோவிலுார் சார்பு நீதிமன்றத்தில் ரூ. 1.26 கோடிக்கு சமரச தீர்வு
ADDED : செப் 14, 2025 01:05 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 396 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடந்த தேசிய லோக் அதாலத் சிறப்பு முகாமிற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி முகமது அலி தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீன் குமார், முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரேம்நாத், 2வது கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரசன்னா முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன விபத்து, நிலப்பிரச்சனை, வங்கி கடன், கல்வி கடன் என 396 வழக்குகள் மீது சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 1,26,77,543 ரூபாய்க்கான தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.