ADDED : அக் 15, 2025 11:19 PM

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை நுாலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா அரிமா சங்கத்துடன் இணைந்து கொண்டாடப்பட்டது.
நுாலகர் அன்பழகன் வரவேற்றார். அரிமா சங்க மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கி அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் அம்முரவிச்சந்திரன், சையத் அலி, நிர்வாகிகள் திருமால், சரவணன், ரவிச்சந்திரன், முருகன் மற்றும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நுாலக பணியாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.


