/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம் அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : மார் 25, 2025 04:36 AM

திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்ட, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருக்கோவிலுாரில், நடந்தது.
மாவட்டத் தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் தங்கவேல் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
துணைத் தலைவர் அர்த்தனாரி வரவேற்றார். இணை செயலாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ஆண்டி பேசினர். மாவட்ட செயலாளர் முரளி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சேகர் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். மாநில நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் உறுதுணையாக இருப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொண்டர் படை தளபதி பிரபு நன்றி கூறினார்.