/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
ADDED : ஜூன் 24, 2025 06:39 AM

உளுந்துார் பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார் பேட்டை அடுத்த பெரியமாரனோடை கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார், 32; விவசாயி. இவர், நேற்று காலை 'ஹோண்டா ஆக்டிவா' பைக்கில் தன் இரண்டரை வயது மகன் தன்வேந்தனை அழைத்துச் சென்றார்.
ஒரத்துார் அருகே முன்னால் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மினி பஸ்சை முந்திச்செல்ல முயன்ற போது, மினி பஸ் திடீரென பிரேக் போட்டதால், பைக் மோதியதில் தவறி விழுந்த குழந்தை தன்வேந்தன், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தது.