ADDED : ஜூன் 21, 2025 03:44 AM
தண்ணீர் வசதியின்றி கழிப்பறை
கள்ளக்குறிச்சி, மோரை பாதையில் உள்ள சமுதாய கழிப்பறை தண்ணீர் வசதியின்மையால் பயன்பாடின்றி உள்ளது.
பாலாஜி, கள்ளக்குறிச்சி
கால்வாய், சாலை வசதி இல்லாததால் அவதி
கள்ளக்குறிச்சி, கிருஷ்ணா நகரில் கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேகர், கள்ளக்குறிச்சி
கோமுகி ஆற்றில் கழிவு நீர்
கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவேந்திரன், கச்சிராயபாளையம்
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே வாகன போக்குவரத்து மிகுதியான முக்கிய சாலையில் சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹரிராமன், கள்ளக்குறிச்சி
ஆபத்தான டிஜிட்டல் பேனர்கள்
எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான வகையில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
பிரபாகரன், எலவனாசூர்கோட்டை