/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தேவியகரம் கூட்டு குடிநீர் திட்ட கட்டுமான பணி துவக்கம் தேவியகரம் கூட்டு குடிநீர் திட்ட கட்டுமான பணி துவக்கம்
தேவியகரம் கூட்டு குடிநீர் திட்ட கட்டுமான பணி துவக்கம்
தேவியகரம் கூட்டு குடிநீர் திட்ட கட்டுமான பணி துவக்கம்
தேவியகரம் கூட்டு குடிநீர் திட்ட கட்டுமான பணி துவக்கம்
ADDED : மே 30, 2025 04:12 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே, கூட்டு குடிநீர் திட்ட கட்டுமான பணியினை பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
திருக்கோவிலுார் அடுத்த தேவியகரம் கிராமத்திற்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தேவியகரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வடக்குநெமிலி, தென்பெண்ணை ஆற்றில் இருந்து தேவியகரம் ஊராட்சிக்கு குடிநீர் எடுத்துச் செல்வதற்கான திட்டம் ரூ. 2.10 கோடியில் திட்டமிடப்பட்டது.
வடக்குநெமிலி, தென்பெண்ணை ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறு மற்றும் தேவியகரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்முடி கட்டுமான பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து வடக்குநெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், சீருடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம், நிர்வாக பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.