ADDED : அக் 15, 2025 11:19 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கத்தையொட்டி, பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தாசில்தார் வைரக்கண்ணு தலைமை தாங்கினார். துணை தாசில்தார் செங்குட்டுவன், மண்டல துணை தாசில்தார் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
வருவாய் ஆய்வாளர் திவ்யா நன்றி கூறினார்.


